Homeசெய்திகள்சினிமாசர்ச்சைகளுக்கு நடுவில் விஜய்யை பாராட்டித் தள்ளிய விஜய் சேதுபதி! - வைரலாகும் இசை வெளியீட்டு விழா...

சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய்யை பாராட்டித் தள்ளிய விஜய் சேதுபதி! – வைரலாகும் இசை வெளியீட்டு விழா பேச்சு!

-

- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பாலாஜி தரணீதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘பத்தா’. இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் உருவான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார்; சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய்யை பாராட்டித் தள்ளிய விஜய் சேதுபதி! - வைரலாகும் இசை வெளியீட்டு விழா பேச்சு!

அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ்’, ஸ்டார் ஸ்டூடியோ 18 மற்றும் ஏ சினி 1 ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை அட்லீ தயாரிப்பதோடு பிரத்யேகமாகவும் வழங்குகிறார். 1980-களில் நடக்கும் ஒரு கதைக் களத்தைக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

we-r-hiring

இசை வெளியீட்டு விழாவும் சுவாரஸ்ய அனுபவங்களும்
படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, விழாவின் ஒரு பகுதியாக மேடையில் சில பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் திரையில் காண்பிக்கப்பட்டு, அவர்களுடனான தங்களது திரையுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய்யின் புகைப்படம் திரையில் தோன்றியதும், அவரைப் பற்றியும் அவருடனான நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்தும் விஜய் சேதுபதி மனம் திறந்து பேசினார்.

விஜய் குறித்து விஜய் சேதுபதி நெகிழ்ச்சிப் பேச்சு
விஜய் குறித்துப் பேசுகையில் அவர் கூறியதாவது, “நான் ஜேசன் சஞ்சயின் பிறந்தநாளுக்கு போன் செய்து வாழ்த்துத் தெரிவித்திருந்தேன். உடனே விஜய் எனக்கு போன் செய்து, ‘நண்பா ரொம்ப நன்றி, அவன் ரொம்ப சந்தோஷமா இருந்தான்’ என்றார். நான் அதைக் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்! சஞ்சய்-க்கு என்னை பிடித்திருக்கிறது என்பதே எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அவன் ரொம்ப தங்கமான பையன்.”

மேலும் தொடர்ந்த அவர், “சஞ்சய் இயக்கும் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் சென்றிருந்தேன். அவருடன் வெறும் ஒரு மணி நேரம் மட்டுமே செலவிட்டிருந்தேன். அதைக் கேள்விப்பட்டு, ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த ரோகனிடம், சஞ்சயைக் கட்டியணைத்து என் அன்பைக் கொடுங்கள் என்று விஜய் சொல்லி அனுப்பியிருந்தார். அந்த ரோகன், தற்போது என்னோடு ‘பத்தா’ படத்திலும் நடித்துள்ளார். விஜய் ஒரு மிகவும் இனிமையான மற்றும் அன்பான மனிதர்” எனப் புகழாரம் சூட்டினார்.

அரசியல் களச் சூழலும் தற்போதைய கவனமும்
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசிய சில கருத்துகள் அரசியல் அரங்கில் தலைமைப் பண்பு குறித்த விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பின. அவர் தவெக தலைவர் விஜய்யைத்தான் பெயர் குறிப்பிடாமல் விமர்சிப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இத்தகைய பரபரப்பான தற்போதைய அரசியல் மற்றும் சினிமா சூழலில், நடிகர் விஜய் சேதுபதி மேடையில் நடிகர் விஜய்யை நெகிழ்ச்சியுடன் பாராட்டிப் பேசியிருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

பிக் பாஸ் சர்ச்சைக்கு விஜய் டிவி விளக்கம்: அரசியல் கருத்துகளுடன் ஒப்பிட வேண்டாம் என வேண்டுகோள்!

MUST READ