Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! கமல், மணிரத்னம் உள்ளிட்டோரை புகழ்ந்த நானி

தமிழ் சினிமாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! கமல், மணிரத்னம் உள்ளிட்டோரை புகழ்ந்த நானி

-

- Advertisement -

நடிகர் நானி நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நானி, தமிழ் சினிமா மற்றும் தமிழ் திரைக் கலைஞர்கள் மீது தனக்கு இருக்கும் மரியாதை மற்றும் ஈர்ப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.

we-r-hiring

“தமிழ் சினிமா எனக்கு பைபிள் மாதிரி”

நானி பேசும்போது, “தமிழ்த் திரைப்படங்கள் எனக்கு பைபிள் மாதிரி. என்னுடைய சினிமா அறிவுக்கும், சினிமா மீதான ஆர்வத்துக்கும், சினிமா மீதான காதலுக்கும் தமிழ் சினிமாவில் உள்ள கலைஞர்கள்தான் இன்ஸ்பிரேஷன்” என்று குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் சினிமாவில் சாதனை படைத்த பல கலைஞர்களை குறிப்பிட்ட நானி, குறிப்பாக கமல்ஹாசன், மணிரத்னம், கே.பாக்யராஜ், பாரதிராஜா உள்ளிட்டோரின் படைப்புகள் தன்னை ஊக்கப்படுத்தியதாக தெரிவித்தார்.

சென்னைக்கு வந்தால் குடும்பத்துக்கு வந்த உணர்வு

ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போதும் தனது திரைக் குடும்பத்தினரிடம் திரும்பி வந்தது போன்ற உணர்வு ஏற்படுவதாக நானி கூறினார். தனக்கும் சென்னை மற்றும் தமிழகத்துக்கும் நீண்ட காலமாக நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பை பல தருணங்களில் உணர்ந்துள்ளதாகவும் நானி கூறினார். இதன் காரணமாகவே தனது திரைப்படங்களுக்கு தமிழில் தானே டப்பிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும் நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.

“தி பாரடைஸ்” மீது அதிக நம்பிக்கை

‘தி பாரடைஸ்’ திரைப்படம் தனது திரையுலக பயணத்தில் மிகவும் கடினமாக உழைத்த திரைப்படம் என்றும், இந்தப் படத்தை பெரிதும் நம்பிக்கையுடன் எதிர்பார்ப்பதாகவும் நானி தெரிவித்தார்.

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்பாபு, கயாடு லோஹர், ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

செப்டம்பர் 24-ல் திரைக்கு வருகிறது

‘தி பாரடைஸ்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் செப்டம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நானி உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.2 கோடி பட்ஜெட்… ரூ.300 கோடியைக் கடந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த ‘ஹனுமான் அன்ஷ்’!

MUST READ