ஜப்பானின் புகழ்பெற்ற மாங்கா மற்றும் அனிமேஷன் தொடரான ‘நருட்டோ’வை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ஹாலிவுட் லைவ்-ஆக்ஷன் திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்படம் தொடர்பாக நடிகர்கள் தேர்வு மற்றும் படப்பிடிப்பு குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.


காக்காஷி வேடத்தில் சார்லஸ் மெல்டன்?
ரசிகர்களின் பிரபலமான கதாபாத்திரமான காக்காஷி ஹட்டகே வேடத்தில் ஹாலிவுட் நடிகர் சார்லஸ் மெல்டன் நடிக்க இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்லஸ் மெல்டன் ‘ரிவர்டேல்’ உள்ளிட்ட படைப்புகளில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும், அவர் டேக்வாண்டோ தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றிருப்பது, அதிரடி காட்சிகள் நிறைந்த காக்காஷி கதாபாத்திரத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன்
‘நருட்டோ’ லைவ்-ஆக்ஷன் திரைப்படத்தை டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மார்வெல் திரைப்படமான ‘ஷாங்-சி அண்ட் தி லெஜண்ட் ஆஃப் தி டென் ரிங்ஸ்’ படத்தை இயக்கியவர்.
லயன்ஸ்கேட் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், நருட்டோ கதையின் ஆரம்பகால நிகழ்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகும் என கூறப்படுகிறது.
டீம் 7 கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேடல்
காக்காஷி கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வு குறித்த தகவல்களுக்கு மத்தியில், நருட்டோ, சசுக்கே மற்றும் சாகுரா ஆகிய முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய இளம் நடிகர்களைத் தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கதாபாத்திரங்கள் நருட்டோ ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவை என்பதால், நடிகர்கள் தேர்வு மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
2027-ல் படப்பிடிப்பு தொடங்குமா?
லைவ்-ஆக்ஷன் ‘நருட்டோ’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல ஆண்டுகளாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நருட்டோவின் ஹாலிவுட் லைவ்-ஆக்ஷன் வடிவம் எவ்வாறு உருவாகப் போகிறது என்பதிலும், கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்படும் நடிகர்கள் யார் என்பதிலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அஜித்தின் ஆவணப்படத்தில் விஜய்! லண்டன் சந்திப்பு காட்சிகளும் இடம்பெறுகிறதா? – ரசிகர்கள் உற்சாகம்
