இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனுஷின் கேப்டன் மில்லர் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன் சந்திப் கிஷன் நிவேதிதா சதீஷ் சிவராஜ் குமார் ஜான் கொகேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதாவது முதல் இரண்டு பாகங்கள் 1940 மற்றும் 1990களில் நடப்பது ஒன்றும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போன்று வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் தனுஷின் கேரையரில் மிகவும் முக்கியமான படமாக உருவாகியுள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை இசை அமைப்பாளரான ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜூலை 28 இல் சம்பவம் இருக்கு…. கில்லர் கில்லர்….” என்று பதிவிட்டுள்ளார்.
July 28 sambavam irukku … killer killer 🔥🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) July 17, 2023
ஏற்கனவே வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் அன்று இந்த படம் குறித்த ஏதேனும் ஒரு தகவல் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ள இந்த அப்டேட் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஜிவி பிரகாஷ் இந்த அப்டேட்டை கொடுத்திருப்பதால் ஜூலை 28 இல் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.