தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொகேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.

தனுஷின் கேரகரில் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 1940களில் நடப்பது போலவும் இரண்டாம் பாகம் 1990களில் நடப்பது போலவும் மூன்றாம் பாகம் தற்போது நடப்பது போலவும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தனுஷ் தனது 50வது படத்தின் ஷூட்டிங்கை தொடங்கியுள்ள நிலையில், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி தனுஷ் பிறந்த நாளில் வெளியிடப்படும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.