தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருள் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், ஜான் கொகேன் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார்.

மேலும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகி வருகிறது.
இறுதி கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி உள்ளது.
இதில் தனுஷ் ஒற்றை சிங்கமாய் போர்க்களத்தில் மடிந்த ஆயிரம் உடல்களுக்கு மத்தியில் நிற்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்த போஸ்டரை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.