தனுஷ், அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்திற்காக அடர்ந்த முடி மற்றும் தாடியுடன் வலம் வந்த தனுஷ் நேற்று திருப்பதியில் மொட்டை அடித்து ஏழுமலையானை தரிசனம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வந்தது. இதன் மூலம் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தனுஷ் மொட்டை அடித்திருப்பது தனது 50வது படத்திற்கான கெட்டப் ஆக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தனுஷின் 50வது படத்திற்கான படப்பிடிப்பை நாளை பூஜையுடன் தொடங்குவதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத்தொடர்ந்து இந்த வாரத்தில் அதற்கான மோஷன் போஸ்டரும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ப. பாண்டி படத்திற்குப் பிறகு தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து காளிதாஸ், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், துசாரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கின்றனர்.
மேலும் இவர்களுடன் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளியும் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.