Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவின் அசுரக் கூட்டணி… மீண்டும் இணையும் வெற்றிமாறன்- தனுஷ்!

தமிழ் சினிமாவின் அசுரக் கூட்டணி… மீண்டும் இணையும் வெற்றிமாறன்- தனுஷ்!

-

அசுரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன், தென்னிந்திய திரை உலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இவர் சூரி மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் இயக்கிய ‘விடுதலை’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் படத்தை அடுத்து வெற்றிமாறன் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் ஆடுகளம், பொல்லாதவன், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போது மீண்டும் இருவரின் கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாகவும், இயக்குனர் வெற்றிமாறன் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளை 2024 இல் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்தப் படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை எனவும் இது முற்றிலும் புதிய படமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

MUST READ