தனுஷிற்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படம் மூலமாக மாறக் கூடியதோ, பாதிப்படையக் கூடியதோ இல்லை, எங்கள் உறவு பற்றி நீங்கள் பேசும் விஷயங்கள் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்றும் சிம்பு – தனுஷ் இருவரும் ஒருவரையொருவர் மதிக்க தெரிந்தவர்கள் என்றும் வெற்றிமாறன் கூறியுள்ளாா்.சிம்பு படத்தை பண்ண தனுஷ் வடசென்னை படத்திற்காக காப்புரிமை கேட்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் NOC-க்காக எந்த பணமும் கேட்கவில்லை. வாடிவாசல் திரைப்படம் எழுத்து வடிவில் இன்னும் முழுமை அடையவில்லை. சில பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த திரைப்படத்திற்கு இன்னும் நேரம் தேவைப்படுகிறது. கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் புதிய திரைப்படம் ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில், இந்த திரைப்படம் வடசென்னை திரைப்படத்திலிருந்து சில விஷயங்கள் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் வடசென்னை பட கதாபாத்திரங்கள் அல்லது அப்படத்தில் கதையை ஒட்டி இந்த புதிய படம் இருக்கும் பட்சத்தில் அதற்கு NOC தருவதற்காக 20 கோடி ரூபாய் நடிகர் தனுஷ் காப்புரிமை கேட்டதாக தகவல்கள் பரவி வந்தது. எனவே இயக்குநர் வெற்றிமாறன் இதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், என்னுடைய அடுத்த திரைப்படம் தாணு தயாரிப்பில் சிம்பு நடிப்பது தான். வாடிவாசல் திரைப்படம் கதை மற்ற எழுத்து இன்னும் முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சில தொழில்நுட்ப ரீதியான விஷயங்கள் காரணமாகவும், நடிகர்கள் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு காரணமாக அப்படியே இருக்கிறது. இன்னும் நேரம் கொஞ்சம் தேவைப்படுகிறது. அதனால் காத்திருக்க முடியாது என்ற காரணத்தினால், தயாரிப்பாளர் தாணு சிம்புவிடம் பேச சொன்னார். அப்படி ஆனது தான் சிம்பு உடனான திரைப்படம். கண்டிப்பாக சிம்பு உடனான படம் வடசென்னை 2 கிடையாது. தனுஷ் நடிப்பில் தான் வடசென்னை 2 அன்புவின் எழுச்சி வெளியாகும். சிம்புவின் படம் வடசென்னை உலகத்தில் தான் இந்த படம் இருக்கும்.
தனுஷ் தான் வடசென்னை திரைப்படத்தின் தயாரிப்பாளர், அவர்தான் வடசென்னை திரைப்படத்தின் அனைத்து உரிமைகளும் தனுஷிடம் மட்டுமே உள்ளது. அதனால் அவர் பணம் கேட்பது தப்பில்லை, அதில் ஒரு தவறும் இல்லை. நான்,சிம்பு, தாணு மூன்று பேரும் சந்தித்து பேசிய அடுத்த நாள் நான் தனுஷிடம் பேசினேன். அப்போது இந்த திரைப்படம் வடசென்னை யுனிவர்சிலும் வரலாம், தனி திரைப்படமாக வரலாம். அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். அவர் நீங்கள் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள், நான் எங்கள் குழுவில் பேசுகிறேன், வடசென்னை யுனிவர்ஸ் படம் பண்றதா இருந்தா பண்ணுங்க, பணம் ஏதும் வேண்டாம் என்று சொன்னார்.நான் யூடியூப்ல் நியூஸ் பார்க்கும்போது என்னை பற்றியோ, தனுஷ் பற்றியோ, படத்தை பற்றியோ பேசும்போது கஷ்டமாக இருந்தது. எனக்கும் தனுஷிற்குமான உறவு ஒரு படத்தின் மூலமாக மாறக்கூடிய, பாதிப்படையக் கூடியது அல்ல. உங்கள் எனக்கு financial ரீதியாக பிரச்சினை வந்தப்போ அவர் தான் ஈடுபட்டு அட்வான்ஸ் பணமாக பெற்றுக் கொள்ள உதவி செய்தார். இந்த திரைப்படத்தை தனுஷ் கேட்டவுடன் உங்களுக்கு இது புதிய திரைப் படமாகவும், சிம்புவிற்கு இது புது அனுபவமாகவும் இருக்கும் என்றார். சிம்பு இது தொடர்பாக பேசியபோது, நீங்கள் உங்களுக்கு எது Comfortable ஆக இருக்குமோ அந்த திரைப்படத்தை எடுங்கள், இதனால் உங்களுக்கும் தனுஷிற்குமான படம் பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சிம்பு தனுஷ் இருவரும் ஒருவரையொருவர் மதிக்கிறார்கள். என்னுடன் இருப்பவர்களுக்கு தெரியும் என்னை கட்டாயப்படுத்தி ஏதும் செய்து வைக்க முடியாது என்று. பொல்லாதவன் திரைப்படத்திற்கு முன்னாடி இருந்து எனக்கு தனுஷ் மிகப்பெரிய பக்கபலமாக இருந்திருக்கிறார். அவர் தயாரிப்பாளராக இல்லாமலோ, நடிக்காமலோ இருந்தால் கூட எனக்காக அவர் என் படத்தில் பாடியாவது கொடுத்திருப்பார், அது போன்றது தான் நானும் தனுஷும். உங்கள் யூகத்தின் அடிப்படையில் பேசுவது யூகமாகவே இருக்கட்டும். சமூக வலைதளங்களில் இருப்பது வெறும் யூகம் மட்டுமே என்றார்.
தொடர்ந்து சரியும் தங்கம் விலை! தேவை இருந்தால் இப்போதே வாங்கலாம்…