அஜித்தின் மங்காத்தா இன்று ரீ-ரிலீசாகியுள்ளதை தொடா்ந்து ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனா்.
அஜித் கரியரின் பெஸ்ட் படங்களில் ஒன்றாக கருதப்படும் மங்காத்தா இன்று ரீ-ரிலீசாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்துள்ளனா். இன்று மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆவதை தொடர்ந்து முன்பதிவு பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ. 1.5 கோடி முன்பதிவில் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மங்காத்தா படம் ரீ-ரிலீசைத் தொடா்ந்து ரசிகா்கள் கொண்டாடி வருகின்றனா். படம் பாா்க்க வந்த இயக்குநா் வெட்கட் பிரபுவிடம், மங்காத்தா 2 வருமா என ரசிகா்கள் ஆா்வமாக கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் “தல சொன்னா ஓகே“ என பதிலளித்தாா். மங்காத்தா ‘1-ம் அவா்தான் சொன்னாா்’ என்றும் ‘மங்காத்தா 2-வும் அவா்தான் சொல்லுவாரு என வெட்கட் பிரபு தெரிவித்தாா்.

