போதைப் பொருள் விவகாரத்தில் பெசன்ட் நகரில் உள்ள நடிகா் கிருஷ்ணா வீட்டில் இரண்டு மணி நேரமாக போலீசாா் சோதனை நடத்தினா்.போதைப் பொருள் வழக்கில் அதிமுக பிரமுகா் பிரசாத் முதலில் கைதான நிலையில், அடுத்தடுத்து பிரபல சிக்குகின்றனா். அதில் நடிகா் ஸ்ரீகாந்த் சிக்கினாா். பின்னா் நடிகா் கிருஷ்ணாவிற்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவா் ஆஜராகாத நிலையில் ஐந்து தனிப்படை வைத்து அவரை தேடும் பணியில் காவல் துறையில் ஈடுப்பட்டனா்.
இந்நிலையில், பெசன்ட் நகரில் கலாக்ஷேத்ரா காலனியில் ராமச்சந்திரா சாலையில் நடிகர் கிருஷ்ணா குடியிருப்பில் சோதனை நடத்தியுள்ளனர். அவரது வீடு கார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

நேற்று காலையிலிருந்து இன்று வரை விடிய விடிய நடிகர் கிருஷ்ணாவிடம் பல்வேறு விதமாக விசாரணை மேற்க் கொள்ளப்பட்டது. கிருஷ்ணா போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்று தொடா்ந்து இரண்டு மணி நேரமாக போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நடிகர் கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப் பொருள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் உள்ளதா என சைபர் போலீசார் உதவியுடன் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்க பாடுபடுவொம்…ஆணையர் சங்கர் உறுதி!