ரெட்ட தல படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய் கடைசியாக ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், ‘மான் கராத்தே’ படத்தின் இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் .சி.எஸ் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய், தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி, பாலாஜி முருகதாஸ், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டீசரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. மேலும் தனுஷ் குரலில் இந்த படத்தின் முதல் பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலானது. அடுத்ததாக இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
Turn up the flame, #RettaThala ‘s Second single #Kandarakolli from 5 pm. Stay tuned!@arunvijayno1 ’s #RettaThala hits theatres worldwide on December 18th!
Produced By- @bbobby @BTGUniversal
Directed By- @kris_thiru1
A @SamCSmusic ‘s Musical@SiddhiIdnani @actortanya… pic.twitter.com/iPpuTFmDpR
— BTG Universal (@BTGUniversal) November 21, 2025

அதன்படி ‘கண்டாரக் கொல்லி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் இரண்டாவது பாடல் இன்று (நவம்பர் 21) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


