spot_imgspot_img
HomeBreaking Newsமுதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – அரசியல் உலகம் இரங்கல்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – அரசியல் உலகம் இரங்கல்…

-

- Advertisement -

இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு (101) சென்னையில் காலமானாா்.

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லகண்ணு மறைவு – அரசியல் உலகம் இரங்கல்…

we-r-hiring

சுதந்திரப் போராட்ட வீரரும், சிபிஐ மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணு(101) உடல் நலக்குறைவால் காலமானாா். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலப் பாதிப்பால் கடந்த 15 நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. தமிழக அரசியலில் பொதுவுடமையின் இலக்கணமாக திகழ்ந்த அவருக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925 ஆம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த அவருக்கு பாலவேசம் என்ற ஆசிரியர் பொதுவுடமை கருத்துக்களை அறிமுகம் செய்தாா் பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக இருந்த நல்லக்கண்ணு,  தன்னுடைய 18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து 80 ஆண்டுகளுக்கும் மேல் ஒரே கட்சியில் பயணம் செய்தவர்.

மேலும் இவர், இந்திய விடுதலைப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமை எதிர்ப்பு, கனிமவள கொள்ளைக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர், தனது வாழ்நாளின் பெரும்பகுதியைப் சிறையில் கழித்தவர்.

 நூற்றாண்டை கண்ட போராட்ட வீரர் கவலைக்கிடம்… மருத்துவமனைக்கு விரையும் அரசியல் தலைவர்கள் …

MUST READ