HomeBreaking Newsரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR...

ரூ. 842 கோடியில் எழும்பூரைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல்! பிரமாண்டமாக மாறப்போகும் வரலாற்றுச் சின்னம்: DPR தயாரிக்க டெண்டர் வெளியீடு!

-

- Advertisement -

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், தலைநகரின் இதயப் பகுதியாகவும் விளங்கும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை, சர்வதேச தரத்திற்கு இணையாகப் பிரமாண்டமாக மேம்படுத்தத் தெற்கு ரயில்வே அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான டெண்டர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்4 லட்சம் பயணிகள்… 500-க்கும் மேற்பட்ட ரயில்கள்!
​இந்தியாவின் மிக பிஸியான ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் 300-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் இந்த நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

we-r-hiring

நாடெங்கிலும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களைத் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.842 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தற்போது சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை ரயில் நிலையங்களை மேம்படுத்தும் அடுத்தகட்ட நடவடிக்கையை ரயில்வே தொடங்கியுள்ளது.

​பாரம்பரியம் மாறாமல் நவீன வசதிகள்!
​சென்னை சென்ட்ரலின் பிரதான அடையாளமான அதன் பாரம்பரியக் கட்டிடப் பகுதிகளுக்கு (Heritage Structure) எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இந்த மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வளாகத்தில் உள்ள மற்ற காலி இடங்களைப் பயன்படுத்தி உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உருவாக்கப்படவுள்ளன.

திட்டமிடப்பட்டுள்ள முக்கிய வசதிகள்:
​பயணிகள் வசதி: பிரமாண்ட ஓய்வறைகள், கூடுதல் எஸ்கலேட்டர்கள் மற்றும் லிப்ட் வசதிகள்.
​வணிக வளாகங்கள்: ரயில் நிலைய வளாகத்திற்குள்ளேயே சர்வதேச தரத்திலான ஷாப்பிங் மால்கள் மற்றும் நவீன உணவகங்கள்.
​உள்கட்டமைப்பு: மிகப்பெரிய அளவிலான வாகன நிறுத்த இடவசதி (Parking Space) மற்றும் நடைமேடைகளில் (Platforms) நவீன அடிப்படை வசதிகள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு: சோலார் மின் உற்பத்தி, குடிநீர் மறுசுழற்சி கட்டமைப்பு, கழிவுநீர் மேம்பாட்டு மையம் மற்றும் மழைநீர் சேமிப்பு வசதிகள்.

அதிகாரிகள் விளக்கம்:
​நாடு முழுவதும் மொத்தம் 40 முக்கிய ரயில் நிலையங்களை மேம்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
​தற்போது சென்ட்ரல் ரயில் நிலைய மேம்பாட்டிற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள், முதன்மை திட்டமிடல், நகர்ப்புற வடிவமைப்பு, பொறியியல் பணிகள் மற்றும் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இதன் மூலம் தகுதியான நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, மிக விரைவில் விரிவான திட்ட வரைபடம் தயார் செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மெகா திட்டத்தின் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிர்காலத்தில் வெறும் பயணப் புள்ளியாக மட்டுமல்லாமல், ஒரு பிரமாண்ட வணிக மற்றும் பொழுதுபோக்கு மையமாகவும் உருவெடுக்கவுள்ளது பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

MUST READ