HomeBreaking Newsபெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில்...

பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில் பெரும் பதற்றம்!

-

- Advertisement -

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சரை மீனவர்கள் பெட்ரோல் கேனுடன் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களின் சரமாரி கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அமைச்சர் காரில் ஏறித் தப்பியோடியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான சம்பவத்தின் முழு விவரம் வருமாறு:

பெட்ரோல்

we-r-hiring

​ஒரு மாதமாக சிறைபிடிக்கப்பட்ட காசிமேடு மீனவர்கள்

​சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் மீனவர்கள் சிலர், கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக ஆந்திர எல்லைப் பகுதியில் அந்மாநில அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களது மீனவர்களையும், படகுகளையும் மீட்கக் கோரி காசிமேடு பகுதி மீனவக் குடும்பங்கள் கடந்த ஒரு மாதமாகத் தமிழக அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், அரசு தரப்பில் அவர்களை மீட்க எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

​மருத்துவ முகாமிற்கு வந்த அமைச்சருக்கு ‘ஷாக்’

​மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை ஒரு மாத காலமாகத் தீர்க்கப்படாத நிலையில், காசிமேடு பகுதியில் மீனவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றைத் துவக்கி வைப்பதற்காக மீன்வளத்துறை அமைச்சர் இன்று வருகை தந்தார். தங்களின் முக்கியப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் மருத்துவ முகாமைத் துவக்க வந்த அமைச்சரைக் கண்டு மீனவர்கள் ஆத்திரமடைந்தனர். முகாம் நடைபெறும் இடத்திற்கு நூற்றுக்கணக்கான மீனவர்கள் திடீரென ஒன்று திரண்டு அமைச்சரைச் சூழ்ந்து கொண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஒரு மாதமாகியும் ஆந்திராவில் இருக்கும் எங்கள் மீனவர்களை ஏன் மீட்கவில்லை?” என்று அமைச்சரை நோக்கிக் கொந்தளிப்புடன் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.

​பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; அமைச்சர் ஓட்டம்!

​போராட்டம் தீவிரமடைந்த வேளையில், திடீரென ஒரு மீனவர் தனது கையில் வைத்திருந்த பெட்ரோல் கேனுடன் அமைச்சர் முன்பாகவே தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கிருந்த போலீசாரும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து அவரைத் தடுத்து நிறுத்தினர். மீனவரின் இந்த அதிரடித் துணிச்சலால் முகாம் நடந்த இடத்தில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு ஒட்டுமொத்தப் பகுதியும் ரணகளமானது. மீனவர்களின் ஆக்ரோஷமான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமலும், நிலைமை கையை மீறிப் போவதைச் உணர்ந்தும் அதிர்ச்சியடைந்த அமைச்சர், மருத்துவ முகாமைப் பாதியிலேயே போட்டுவிட்டுத் தனது பாதுகாப்புப் போலீசாரின் உதவியுடன் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினார்.

உடனடியாகத் தனது காரில் ஏறி அவர் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் அமைச்சர் தப்பியோடிய சம்பவம் காசிமேடு மீனவ மக்களிடையே மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காசிமேடு பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

MUST READ