spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை வெளியிடும் ரஜினி!

டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை வெளியிடும் ரஜினி!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை ரஜினி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை வெளியிடும் ரஜினி!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பாராட்டு மழையில் நனைந்தது. இந்த படத்தில் இயக்குனர் அபிஷனும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், அந்த கதாபாத்திரம் படத்திற்கு பலம் தந்தது. எனவே இதைத்தொடர்ந்து அபிஷன் புதிய படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை வெளியிடும் ரஜினி!ஆனால் அதற்கு பதிலாக அவர் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள புதிய படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ்ராஜ் பஸ்லியான் ஆகிய இருவரும் இணைந்து தங்களின் ஷியோன் ஃபிலிம்ஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கிறார்கள். இந்த படத்தை மதன் குமார் இயக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைக்கிறார். இதில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை வெளியிடும் ரஜினி!இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. அதைத்தொடர்ந்து இதன் டப்பிங் பணிகள் போன்ற பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று (நவம்பர் 21) மாலை 6 மணி அளவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகும் என்றும் அதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட இருக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ