ரஜினி பிறந்தநாளில் ஜெயிலர் 2 பட அப்டேட் வெளியாக இருக்கிறது என தகவல் கசிந்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் அதிரடி ஆக்சன் படமாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். நெல்சனின் திரைக்கதை எப்படி வலுவாக இருந்ததோ, அதேபோல் அனிருத்தின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் தந்தது. எனவே இந்த படம் உலக அளவில் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
இதைத்தொடர்ந்து ரஜினி – நெல்சன் – அனிருத் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இதன் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி கேரளா, கோவா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது தவிர படமானது அடுத்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி திரைக்கு வரும் என ரஜினி அப்டேட் கொடுத்துள்ளார். இவ்வாறு இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் தூண்டி வருகிறது. இந்த நிலையில் புதிய அப்டேட் ஒன்றும் கிடைத்துள்ளது.
அதாவது வருகின்ற டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜெயிலர் 2’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசரே தெறிக்கவிட்ட நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் நிச்சயம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


