ஜனநாயகன் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ‘ஜனநாயகன்’. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்க கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதன் இசையமைப்பாளராகவும், சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். இந்த படமானது விஜயின் கடைசி படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி படம் தொடர்பான ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அடுத்தது முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. மேலும் ரசிகர்களும் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி தீர்க்க தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இன்று (நவம்பர் 21) மாலை 5.30 மணி அளவில் அப்டேட் ஒன்று வெளியாகும் என அறிவித்துள்ளது.
Selamat datang 😁
Watch this space at 5:30 PM today ✌🏻#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/j8SyLZY8xi
— KVN Productions (@KvnProductions) November 21, 2025

இதன் மூலம் இந்த அறிவிப்பு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் என தகவல் கசிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.


