ரஜினிகாந்த் – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி, ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சிங்கப்பூர் சலூன், சொர்க்கவாசல் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். இதற்கிடையில் இவர், ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜி குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஆர்.ஜே. பாலாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக புதிய கதை ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறாராம். விரைவில் ரஜினியிடம் சொல்ல திட்டமிட்டுள்ளாராம் ஆர்.ஜே. பாலாஜி.
மேலும் இந்த கதை ஆரம்பத்தில் விஜயிடம் சொல்லப்பட்ட கதையாக இருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் இனிவரும் நாட்களில் ரஜினி – ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

‘தலைவர் 173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகிய பிறகு, அடுத்தது அந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் ஆர்.ஜே. பாலாஜி, ரஜினியிடம் கதை சொல்லப்போகும் தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. ஏனென்றால் ரஜினிக்கு கதை பிடித்து போனால் ‘தலைவர் 173’ படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க வாய்ப்புள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.


