spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவெற்றிமாறன் தயாரித்த 'மாஸ்க்'.... கவினுக்கு வெற்றி படமா? தோல்வி படமா?.... ட்விட்டர் விமர்சனம்!

வெற்றிமாறன் தயாரித்த ‘மாஸ்க்’…. கவினுக்கு வெற்றி படமா? தோல்வி படமா?…. ட்விட்டர் விமர்சனம்!

-

- Advertisement -

கவின் நடிப்பில் இன்று (நவம்பர் 21) வெளியாகி இருக்கும் மாஸ்க் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.வெற்றிமாறன் தயாரித்த 'மாஸ்க்'.... கவினுக்கு வெற்றி படமா? தோல்வி படமா?.... ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘மாஸ்க்’. இந்த படத்தை விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இதில் கவினுடன் இணைந்து ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘டாடா’ படத்திற்கு பிறகு கவின் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றியை தரவில்லை. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி ரசிகர்களும் இந்த படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்த்து வருகின்றனர். அத்துடன் தங்களின் விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “கவின் ரொம்பவே தன்னம்பிக்கையுடன் ஸ்ட்ராங்காக பெர்பார்ம் செய்து இருக்கிறார். ஆண்ட்ரியா மற்றும் அவருடைய கேங் தொடர்பான காட்சிகள் செயற்கையாக இருக்கிறது. வினோத் நன்றாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு துணையாக நிற்கிறது. மோகனின் காமெடி காட்சிகள் அருமை. இன்டர்வெல் காட்சி, வசனங்கள் அருமை. டார்க்/ லைட் காமெடி அந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. சாதாரண கதைதான். திரைக்கதையில் வேடிக்கையும் விறுவிறுப்பும் குறைவு. மொத்தத்தில் இது சராசரி படம்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “குடும்ப உணர்வுகள், ஆக்சன், காதல் காட்சிகள் மற்றும் நகைச்சுவை ஆகியவை சரியான சமநிலையில் கொண்ட ஒரு இறுக்கமான திரில்லர் படம். கவின் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் வலுவான நடிப்பை வழங்கியுள்ளார்கள். நான்கு முதல் ஐந்து காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் தருகிறது. இந்த படம் தியேட்டரில் சென்று பார்க்க கூடிய படம்” என்று தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

வேறொரு ரசிகர், “மாஸ்க் படம் ஒரு நீட்டான ஹெய்ஸ்ட் திரில்லர் படம். இரண்டாம் பாதி வேகமாக நகர்ந்து தொடர்ந்து ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. கொள்ளை காட்சிகள் நேர்த்தியாகவும் விரும்பத்தக்கதாகவும் உள்ளது. ஆண்ட்ரியா வில்லியாக முழு கட்டுப்பாட்டையும் எடுக்கிறார். கவின் மற்றும் ஆண்ட்ரியாவின் மோதல் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. பேட்டரி கதாபாத்திரம் அருமை. சார்லியின் நடிப்பு மாநகரம் படத்திற்குப் பிறகு ஆச்சரியத்தை தருகிறது. வெற்றி வீரனே பாடலுடன் வரும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் கூஸ்பம்ப்ஸ் தருகிறது. பின்னணி இசை தனித்து நிற்கிறது. ஒரு சாதாரண மனிதனின் சக்தி மற்றும் நடுத்தர வர்க்க கோணம் ஆகியவை நன்றாக காட்டப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ