spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking News'ரெட்ட தல' படத்திலிருந்து 'கண்டார கொல்லி' பாடல் வெளியீடு!

‘ரெட்ட தல’ படத்திலிருந்து ‘கண்டார கொல்லி’ பாடல் வெளியீடு!

-

- Advertisement -

ரெட்ட தல படத்திலிருந்து ‘கண்டார கொல்லி’ பாடல் வெளியாகியுள்ளது.'ரெட்ட தல' படத்திலிருந்து 'கண்டார கொல்லி' பாடல் வெளியீடு!

அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ரெட்ட தல. இந்த படத்தை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கிறார். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாம் .சி.எஸ் இசையமைத்துள்ளார். டிஜோ டாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி, பாலாஜி முருகதாஸ், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் படமானது வருகின்ற டிசம்பர் 18ஆம் தேதி உலகம் முழுதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

we-r-hiring

அதே சமயம் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ‘கண்டார கொல்லி’ எனும் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை சிவம் பாடி இருக்கும் நிலையில் விவேகா பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ