விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ், விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, திருக்குறள் மற்றும் குட் டே ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.
அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு எடிட் செய்துள்ள லியோ ஜான் பால் விஜய் ஆண்டனியை வைத்து மார்கன் திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து, நடித்து அவரே இசையமைத்துள்ளார்.ஃபேண்டசி திரில்லர் திரைப்படமாக உருவாகிய இப்படத்தில் விஜய் ஆண்டனியின் சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, பிரிகிடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கெனவே விஜய் ஆண்டனியின் எமன் படத்தின் ரிலீசுக்கு முன்பே 6 நிமிட காட்சியை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்த நிலையில் தற்போது இப்படத்தின் முதல் 6 நிமிட காட்சியும் அவர் வெளியிட்டுள்ளார். விஜய் ஆண்டனியின் மாறுபட்டு தோற்றத்தில் தயாராகி உள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிப்பில் லவ் மேரேஜ் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகனுக்கு பெண் தேடும் பேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் கண்ணப்பா. இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கிய இப்படத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.
பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் திருக்குறள் படம் நாளை திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா வரிகள் எழுதி இசையமைத்துள்ளார்.
இதோடு பிருதிவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி மற்றும் போஸ் வெங்கட் ஆகியோா் நடித்த தெலுங்கு படமான குட் டே என்ற திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. பிருதிவிராஜ் ராமலிங்கம் இப்படத்தை தயாாித்துள்ளாா்.
இலங்கை கைதி மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
