நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது தனது 25வது படமான ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க உள்ளாராம். எனவே இந்த படமானது சிவகார்த்திகேயனின் 26ஆவது படமாக உருவாகும் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இயக்குனர் வெங்கட் பிரபு இதனை பல மேடைகளில் உறுதி செய்துள்ளார்.
இது தவிர இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கப்போகிறார் என செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படமானது சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகும் எனவும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. அதாவது நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் இணைந்து ‘ஹீரோ’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


