இயக்குனர் அவதாரம் எடுத்த பிக்பாஸ் அமீர்… கதாநாயகி ஆகும் பாவனி!

பிக்பாஸ் அமீர் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமான அமீர் இயக்குநராக களமிறங்குகிறார். பிக்பாஸ் சீசன் 5-ல் வைல்ட் கார்டு என்ட்ரி மூலமாக நுழைந்தவர் அமீர். அந்த நிகழ்ச்சியில் பாவனியும் இருந்தார். அங்கு அமீருக்கு பாவனி மீது காதல் ஏற்பட்டது. வெளியே வந்ததும் பாவனியும் அமீரும் காதல் ஜோடிகளாக மாறினர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளும் நிலையில் இருக்கின்றனர்.

Amir
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இருவரும் மிகவும் பிரபலம் ஆனதால் அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அமீர் மற்றும் பாவனி ஜோடி புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை அமீர் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது.

பூஜையில் அமீர் மற்றும் பாவனி, சுரேஷ் சக்கரவ்ர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் விடிவி கணேஷூம், நடிகை காய்த்ரி ஜெயராமும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisement