ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ ஷூட்டிங் ஓவர்… ஜாலியா வீடியோ வெளியிட்ட படக்குழு!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இது தான் படத்தின் ஹைலைட். இதுவே படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

Laal Salaam

இந்தப் படம் கிரிக்கெட் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு உருவாகி வருகிறது. காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா ஆகியோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஏஆர்‌ ரகுமான் இசையமைக்கிறார்.

திருவண்ணாமலை, செஞ்சி பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாமாக காணப்படும் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Advertisement