சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
அவர் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இந்தப் படத்தில் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இது படத்தின் மீது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

காமெடி நடிகர் செந்திலும் இந்தப் படத்தில் இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது திருவண்ணாமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறார்.
தற்போது இந்தப் படத்தில் நடிகர் தம்பி ராமையா இணைந்துள்ளாராம். நாளுக்கு நாள் படத்தின் நடிகர்கள் வரிசை அதிகமாகிக் கொண்டே வருவது படத்தின் மீதான ஆர்வத்தையும் சேர்த்தே அதிகமாக்குகிறது. இந்தப் படம் கிரிக்கெட் கதைக்களத்தை அடிப்படியாக கொண்டு உருவாகி வருகிறது.
படம் குறித்த கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘லால் சலாம்’ என்ற தலைப்பு பேசுபொருளாகவும் மாறியுள்ளது. கம்யூனிஸ்டுகள் பயன்படுத்தும் இந்த ஸ்லோகம் படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளதால் படம் அரசியல் கதைக்களத்தையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.