Homeசெய்திகள்தமிழ்நாடுஐஸ்வர்யா ரஜினி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை- வேலைக்காரி கைது

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை- வேலைக்காரி கைது

-

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை- வேலைக்காரி கைது

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் வைத்திருந்த 60 சவரன் நகைகள் மாயமான விவகாரத்தில் அவரது வேலைக்கார பெண் சிக்கியுள்ளார்.

சென்னை போயஸ்கார்டன் ராகவீரா அவென்யூ சாலையில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்(41). நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா சமீபத்தில் கணவர் தனுஷுடன் விவாகரத்து பெற்று வசித்து வருகிறார். இவர் வை ராஜா வை, 3 உள்ளிட்ட பல திரைப்படங்களையும் இயக்கியும் உள்ளார். லால் சலாம் என்ற திரைப்படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கியும் வருகிறார்.

இந்த நிலையில் தனது வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60சவரன் நகைகளை காணவில்லை என ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது தங்கை சௌந்தர்யா திருமணத்திற்கு பிறகு வைர கற்கள், நெக்லஸ் என சுமார் 60 சவரன் நகைகளை வீட்டில் உள்ள லாக்கரில் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் பிறகு சென்ட் மேரிஸ் சாலையில் உள்ள வீட்டிலும், நடிகர் தனுஷின் சிஐடி நகர் வீட்டிலும், போயஸ் கார்டனில் உள்ள தந்தை நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் அந்த லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

a

கடந்த மாதம் 10ஆம் தேதி லாக்கரில் இருந்த நகைகளை எடுக்க சென்ற போது, அதில் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். லாக்கரில் தங்க நகைகள் வைத்திருப்பது வீட்டில் பணிபுரியும் பெண்கள் மற்றும் தனது கார் ஓட்டுனருக்கு மட்டுமே தெரியும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். 18 வருடங்களாக வைத்திருந்த தனது நகைகளை உடனடியாக மீட்டு தரக்கோரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணிபுரியும் பெண்களை அழைத்து விசாரணை நடத்தினர். அதில் வேலைக்கார பெண் ஈஸ்வரி(40) நகைகளை திருடியது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீசார் ஈஸ்வரியின் வங்கி பரிவர்த்தனைகளை சோதனை தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

MUST READ