spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது - செல்வ பெருந்தகை...

எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது – செல்வ பெருந்தகை பெருமிதம்

-

- Advertisement -

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கிறிஸ்டோபர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். எந்தவித பின்புலமும், பெரிய அளவில் சொத்துக்களும் இல்லாத ஒரு சாதாரண தொண்டரை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பெருமிதம் தெரிவித்துள்ளது.எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது - செல்வ பெருந்தகை பெருமிதம்தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறியதாவது, “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராகப் பணியாற்றி வரும் கிறிஸ்டோபர் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எங்களது அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ஒரு சாதாரண எளிய தொண்டரை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்துள்ளனர்.

கிறிஸ்டோபர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களைப் பார்த்தால், அவரிடம் இருப்பது வெறும் ஒரு சவரன் தங்க நகை மட்டுமே. அவரது வங்கிக் கணக்கில் உள்ள கையிருப்புத் தொகை வெறும் 13,000 மக்களுக்கு மட்டுமே. இவற்றைத் தவிர்த்து அவரிடம் வேறு எந்த சொத்துக்களும் கிடையாது. எதுவுமே இல்லாத ஒரு சாதாரண அடிமட்டத் தொண்டரைத்தான் காங்கிரஸ் பேரியக்கம் இன்று மாநிலங்களவைக்குத் தேர்வு செய்துள்ளது.

we-r-hiring

காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இந்த வாய்ப்பினை வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

வேட்பாளர் கிறிஸ்டோபர் தமிழக மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “கிறிஸ்டோபர் ஏற்கனவே ஒடிசா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக பணியாற்றியவர். தற்போது மணிப்பூர், நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் கட்சிப் பணியாற்றி வருகிறார். இளைஞர் காங்கிரஸில் இருந்து வளர்ந்து வந்த அவர், கட்சிக்கு நன்கு அறிமுகமானவர். இனி வரும் காலங்களில் மக்களுக்கும் நன்கு அறிமுகமாவார்” என்று விளக்கம் அளித்தார்.

தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடகர், “மிகக் குறைந்த வயதிலேயே கிறிஸ்டோபருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் கட்சியின் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. எந்தவிதப் பெரிய சொத்து வசதியும் இல்லாத, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி முன்னிறுத்த விரும்புகிறது என்பதையே இது உணர்த்துகிறது.

கட்சிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் கிறிஸ்டோபர். அவர் வடகிழக்கு மாநிலங்களிலும், ஒடிசாவில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும், தமிழ்நாட்டிலும் களத்தில் இறங்கித் தீவிரமாகப் பணியாற்றியுள்ளார்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தலித் இளைஞரான அவருக்கு, அவரது உழைப்பை மதித்து இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடினமாக உழைக்கக்கூடிய, திறமையான, சாமானிய தொண்டர்களை காங்கிரஸ் கட்சி என்றுமே மதிக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். இதற்காக காங்கிரஸ் தலைமைக்கும், தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் கிருஸ்டோபர் திலக், “எனக்கு பெரிய அளவில் அறிமுகம் இல்லாவிட்டாலும், எனது செயல்பாடுகள் மற்றும் பணியின் மூலமாக தமிழக மக்களிடத்தில் என்னை நான் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்வேன்” என்று காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சோனியா காந்தி ஆசியுடனும், ராகுல் காந்தியால் அடையாளம் காணப்பட்டவனாகவும் நான் மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ளேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை மற்றும் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் மூலமாக, ஒரு எளிய கட்சிப் பணியாளனாக என்னை அடையாளப்படுத்தி, இந்தப் பெரும் பொறுப்பை எனக்கு வழங்கியுள்ளனர்.

என்னைப் பற்றிப் பெரிய அளவில் அறிமுகம் இல்லை என்று கூறப்பட்டாலும், எனது பணியின் மூலமாக கண்டிப்பாக தமிழக மக்களுக்கு நான் சரியாக அறிமுகப்படுத்தப்படுவேன். அதற்கு எனது கட்சித் தலைவர்களும், மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுதுணையாக இருப்பார்கள். கிரிஷ் சோடங்கர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தமிழக மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை நான் கண்டிப்பாக ஆற்றுவேன்.

மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினாா்.

தமிழ்நாட்டின் சமூக நலத் திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

MUST READ