Homeசெய்திகள்தமிழ்நாடு“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது!”: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது!”: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்

-

- Advertisement -

காவிரி ஆற்றில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக வலியுறுத்திய நிலையில், “அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் தண்ணீரைத் திறந்து விட முடியாது” என்று கர்நாடக அரசு மீண்டும் பிடிவாதம் காட்டியுள்ளது.

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது!”: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்

we-r-hiring

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்
காவிரி நீர் விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகளுடனான காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு மாதாந்திர அடிப்படையில் வழங்க வேண்டிய உரிய காவிரி நீரைத் தாமதமின்றி உடனடியாகத் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆணையத்திடம் உறுதியாக வலியுறுத்தினர்.

கர்நாடகாவின் வழக்கமான பிடிவாதம்
தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைக்குப் பதிலளித்துப் பேசிய கர்நாடக மாநில அதிகாரிகள் தரப்பு,“கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லாத காரணத்தால் அணைகளுக்குத் தற்போது போதிய நீர்வரத்து இல்லை. எனவே, இப்போதைய சூழலில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீரைக் திறந்து விட முடியாது.” என கர்நாடக அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கூறி, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்க மீண்டும் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துத் தன் பிடிவாதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

விவசாயிகள் கவலை
குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகளுக்குக் காவிரி நீர் மிகவும் அத்தியாவசியமாக உள்ள நிலையில், கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்க மறுத்து வருவது தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதில் தலையிட்டுத் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

“ஆளுங்கட்சி நிழலில் இருப்பதால் திருமாவளவன் எதை வேண்டுமானாலும் பேசுவார்!”: அதிமுக தளவாய் சுந்தரம் அதிரடி சாடல்

MUST READ