திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப் பட்டியலிட்டு முதல்வர் அதிரடி!
சட்டப்பேரவையில் திமுக ஆட்சிக்கால ஊழல்கள் குறித்து காரசாரமாக உரையாற்றிய முதலமைச்சர் விஜய், டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதப் பணவசூலில் ஈடுபட்ட ‘கரூர் கேங்’ அமைப்பின் தலைவர் யார் என மக்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளதாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்க்காரியா கமிஷன் முதல் கரூர் கேங் வரை சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், அமலாக்கத்துறை மற்றும் கமிஷன் அறிக்கைகளை மேற்கோள் காட்டி திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைப் முன்வைத்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் டாஸ்மாக் டெண்டர்களில் தலையிட்டு முறைகேடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமலாக்கத்துறை அறிக்கை சான்று கோவை மற்றும் கரூர் பகுதிகளில் உள்ள மதுபான பார் உரிமையாளர்களிடமிருந்து ‘கரூர் கேங்’ என்ற அமைப்பு கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாக அமலாக்கத்துறைத் தகவல்கள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்ட அறிக்கை விவரங்கள் அவையில் சலசலப்பை ஏற்படுத்தின.
“குடும்பமாகத் தான் செய்வார்கள்” – முதல்வர் தாக்குதிமுகவின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசிய முதல்வர் விஜய், “திமுக எப்போது எதைச் செய்தாலும் அதை ஒரு குடும்பமாகத்தான் செய்வார்கள் போலிருக்கிறது” என்று எள்ளலாகக் சாடினார்.
மேலும், “அமலாக்கத்துறை அறிக்கையிலேயே ‘கரூர் கேங்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கூட்டமைப்பை அமைத்துச் செயல்பட்ட அந்த ‘கரூர் கேங்கின்’ உண்மையான தலைவர் யார் என்று தெரிந்துகொள்ள சட்டப்பேரவைக்கும் தமிழக மக்களுக்கும் அதிக ஆர்வமாக உள்ளது” என்றும் அவர் ஆவேசமாகக் கூறினார்.
