Homeசெய்திகள்தமிழ்நாடு"ராகுல் வர்றாருனு தெரிஞ்சதும் விஜய் எஸ்கேப்!".. வைகோ விழா சீக்ரெட்.. பின்னணியை உடைத்த வல்லம் பஷீர்!

“ராகுல் வர்றாருனு தெரிஞ்சதும் விஜய் எஸ்கேப்!”.. வைகோ விழா சீக்ரெட்.. பின்னணியை உடைத்த வல்லம் பஷீர்!

-

- Advertisement -

“தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் அரசியல் சூழலில், நடிகர் விஜய்யைப் பின்னணியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக இயக்கி வருகிறது. குறிப்பாக, தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் கிடுகிடு எழுச்சியைத் தடுப்பதற்காகவே ‘விஜய் பிரதமர்’ என்ற பிரச்சாரத்தை பாஜக திட்டமிட்டு முன்னெடுத்து வருகிறது” எனத் திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்."ராகுல் வர்றாருனு தெரிஞ்சதும் விஜய் எஸ்கேப்!".. வைகோ விழா சீக்ரெட்.. பின்னணியை உடைத்த வல்லம் பஷீர்!

அமித்ஷா வருகைக்குப் பின் மாறிய அரசியல் சுழல்!
நேர்காணலில் தமிழக அரசியலின் தற்போதைய மாற்றங்கள் குறித்து விரிவாகப் பேசிய வல்லம் பஷீர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்து சென்றதற்குப் பிறகுதான், ‘விஜய் பிரதமர் வேட்பாளர்’ என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தன் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழும் இந்தக் குரலைச் சற்றும் கட்டுப்படுத்தவோ அல்லது மறுக்கவோ விஜய் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

we-r-hiring

பாஜகவின் மறைமுகக் கொள்கை மற்றும் வழிகாட்டுதலின்படியே விஜய் தற்போது செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தென் மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை உடைக்க வேண்டும் என்பதற்காகவே, விஜய்யின் திரைத்துறைப் பிரபலத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய அரசியல் நரேட்டிவை உருவாக்க பாஜக வியூகம் அமைத்து இயங்குகிறது” என்று சாடினார்.

"ராகுல் வர்றாருனு தெரிஞ்சதும் விஜய் எஸ்கேப்!".. வைகோ விழா சீக்ரெட்.. பின்னணியை உடைத்த வல்லம் பஷீர்!

வைகோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்கும்… விஜய் விலகிய பின்னணியும்!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்காதது குறித்து விவரித்த அவர், “தொடக்கத்தில், பாஜகவின் மூத்த தலைவரான சி.பி. ராதாகிருஷ்ணனுடன் ஒரே மேடையில் பங்கேற்க விஜய் சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த விழாவில் ராகுல் காந்தி மட்டுமே முதன்மை விருந்தினராகப் பங்கேற்பார் என்ற சூழல் உருவானதும், விஜய் அந்த நிகழ்வில் இருந்து திடீரென ஒதுங்கிக் கொண்டார். பாஜகவுடன் இணக்கமான சூழலை உருவாக்கவே விஜய் விரும்புகிறாரே தவிர, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பயணிக்க அவர் தயாராக இல்லை என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படையாகக் காட்டுகிறது” என்றார்."ராகுல் வர்றாருனு தெரிஞ்சதும் விஜய் எஸ்கேப்!".. வைகோ விழா சீக்ரெட்.. பின்னணியை உடைத்த வல்லம் பஷீர்!

சட்டமன்றத்தில் உதயநிதி வீசிய ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’
சமீபத்தில் சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எனது அரசியல் ஆசான்களில் ஒருவர் திருமாவளவன்” என்று பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்த வல்லம் பஷீர், “உதயநிதி ஸ்டாலின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளார். சட்டமன்ற அவைக்குறிப்பில் இந்த வரலாற்றுப் பதிவை இடம்பெறச் செய்து, திருமாவளவனைத் தங்களுக்கு நன்றி சொல்ல வைத்ததுடன், இன்னொரு பக்கம் விஜய்க்குத் திருமாவளவன் மீது தேவையற்ற சந்தேகக் கண் பார்வையை உருவாக்க வைத்துள்ளார்” என்று சுட்டிக்காட்டினார்.

கூட்டணிக் கூட்டங்கள் குறித்துக் காரசார விமர்சனம்!
த.வெ.கவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், “த.வெ.க நடத்திய முதல் கூட்டத்தில் இந்தியா கூட்டணி குறித்தோ அல்லது அடுத்தகட்ட வியூகங்கள் குறித்தோ எந்தவொரு தெளிவான முடிவும் எடுக்கப்படவில்லை. தங்களது கூட்டணி இப்போதும் intact-ஆக (வலுவாக) உள்ளது என்பதை உலகிற்கு வெளிக்காட்டுவதற்காகவே அவர்கள் மீண்டும் மீண்டும் கூட்டணிக் கூட்டங்களைக் கூட்டி வருகின்றனர்” என வல்லம் பஷீர் சாடியுள்ளார்.

“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!

MUST READ