Homeசெய்திகள்தமிழ்நாடு"குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டி த.வெ.க!" - சென்னை பெசன்ட் நகர் படுகொலை விவகாரத்தில் உதயநிதி...

“குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டி த.வெ.க!” – சென்னை பெசன்ட் நகர் படுகொலை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

-

- Advertisement -

சென்னை பெசன்ட் நகரில் குற்றப் பின்னணி கொண்ட த.வெ.க பிரமுகர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் சுட்டிக்காட்டி, த.வெ.க மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்."குற்றவாளிகள் தஞ்சமடையும் குப்பைத் தொட்டி த.வெ.க!" - சென்னை பெசன்ட் நகர் படுகொலை விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

பெசன்ட் நகரில் நடுரோட்டில் கொடூரம்!
சென்னை பெசன்ட் நகர் பகுதியில், சரித்திரப் பதிவேடு குற்றப் பின்னணி கொண்டவரும், த.வெ.க பிரமுகருமான ஒருவரை மர்ம நபர்கள் சிலர் மக்கள் நடமாட்டம் நிறைந்த வீதியில் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியது.

we-r-hiring

“சட்டம்-ஒழுங்கு சீர்கேடா? த.வெ.க-வின் நிலையா?”
இப்படுகொலை சம்பவம் குறித்துத் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் த.வெ.க தலைமை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்:

“தலைநகரிலேயே பிரதான சாலையில், இப்படி ஒரு கொடூரக் கொலை நடக்கும் அளவுக்குச் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுப் போயிருப்பதை நினைத்து வருந்துவதா? இல்லை, சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமடையும் ஒரு குப்பைத் தொட்டியாகத் த.வெ.க மாறி இருப்பதை நினைத்து வருந்துவதா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக மீது பழியைப் போடுவதை நிறுத்த வேண்டும்!
தொடர்ந்து பேசிய அவர், “எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அதற்கும் திமுகவை எப்படி குற்றம் சொல்லலாம் என்று யோசிப்பதை த.வெ.க முதற்கொண்டு அனைவரும் நிறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு, தலைநகரிலும் மாநிலம் முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதியாகவும் தீவிரமாகவும் செய்வதற்கு அரசு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதான் உங்க ‘வெற்றி சட்டம் – ஒழுங்கா’ முதல்வர் அவர்களே?”.. மானியக் கோரிக்கை நாளில் சென்னை அதிர்ச்சி.. உதயநிதி அட்டாக்!

MUST READ