Homeசெய்திகள்தமிழ்நாடுபேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க...

பேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க முற்றுகை!

-

- Advertisement -

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் விமர்சனப் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பியதோடு, அவையின் மையப்பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பேரவையில் திமுக உறுப்பினர்கள் திடீர் தர்ணா! முதலமைச்சர் பேச்சுக்கு பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் சபாநாயகர் இருக்க முற்றுகை!

இதனால் சட்டப்பேரவையில் பெரும் அமளி ஏற்பட்டது.

we-r-hiring

சபாநாயகர் இருக்கை முற்றுகை – அவையில் கூச்சல் குழப்பம்
முதலமைச்சர் விஜய் தனது உரையின் போது திமுக மூத்த நிர்வாகியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்துக் கடுமையான விமர்சன முன்வைத்தார். அதற்கு உடனடியாகப் பதிலளிக்க திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரிடம் அனுமதி கோரினர்.

ஆனால், “அவையின் விதிமுறைகளின்படி தற்போதைய நேரடி ஒளிபரப்பு உரைக்கு இடையே பதிலளிக்க அனுமதி தர இயலாது, தனியாகச் நேரம் ஒதுக்கப்படும்” என்று சபாநாயகர் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து, சபாநாயகர் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு பேரவைத் தலைவருக்கு எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர்.

எங்களுக்குப் பேச வாய்ப்பு மறுப்பது ஜனநாயகப் படுகொலை!

எதிர்க்கட்சியின் குரலை நசுக்காதே! என திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியதால், அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் நிலவியது.

மையப்பகுதியில் அமர்ந்து தர்ணா
சபாநாயகரின் விளக்கத்தை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவைத் தலைவரின் இருக்கைக்கு முன்னால் உள்ள மையப்பகுதிக்கு (Well of the House) வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவை நடவடிக்கைகள் பாதிப்பு: திமுகவினரின் தொடர் முழக்கங்களால் சட்டப்பேரவை நடவடிக்கைகள் சிறிது நேரம் முடங்கின.

அமைதி காக்க சபாநாயகர் வேண்டுகோள்: “உறுப்பினர்கள் தங்களின் இருக்கைகளுக்குச் சென்று அமைதி காக்க வேண்டும்; விதிகளை மீறி செயல்பட்டால் அவை நடவடிக்கை எடுக்க நேரிடும்” எனப் பேரவைத் தலைவர் எச்சரித்தார்.

முதலமைச்சரின் காரசாரமான உரை, அதற்கு எதிராகவும் பதிலளிக்கும் உரிமையைக் கோரியும் திமுகவினர் மேற்கொண்ட தர்ணா போராட்டத்தால், தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகம் முழுவதும் மிகுந்த பரபரப்பான சூழல் காணப்பட்டது.

மக்கள் தீர்ப்பை ஏற்க முடியாதவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும்?— திமுக நிர்வாகியின் பேச்சுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம்!

MUST READ