Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

-

- Advertisement -

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது மத்திய அரசு மிகப்பெரிய வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி.) கனிமொழி காட்டமாக உரைத்துள்ளார்.

மாணவர்கள் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது!”: திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு!

we-r-hiring

மாணவர்கள், விவசாயிகள் மீது அக்கறையில்லை
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி, மாணவர்களின் போராட்டம் குறித்துப் பேசியதாவது,“டெல்லியில் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதி வழியில் போராடி வரும் மாணவர்களின் மீது மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு மாணவர்கள் மீதோ அல்லது விவசாயிகள் மீதோ சிறிதளவாவது அக்கறை இருந்திருந்தால், அவர்கள் மீது இதுபோன்ற வன்முறையைச் நிகழ்த்தியிருக்க மாட்டார்கள்.”  என  கனிமொழி, திமுக எம்.பி. குற்றம்சாட்டியுள்ளாா்.

கண்டனக் குரல்கள் தீவிரமடைகின்றன
டெல்லியில் மாணவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களுக்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியிலேயே நேரடியாகச் செய்தியாளர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி. மத்திய அரசின் நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, தேசிய அளவில் இப்போராட்டத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

காமராஜர் பெயர் சூட்டப்பட்ட காலை உணவுத் திட்டம்!.. வைரலாகும் தமிழ்நாடு அரசின் அரசாணை!

MUST READ