ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்கள் மட்டுமே அனுமதி என அமெரிக்கா அறிவித்திருப்பதை சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சித்துள்ளாா்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” இந்தியா எங்கிருந்து எரிபொருள் வாங்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா திர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது. இது நாட்டின் சுயாட்சி மற்றும் பொருளாதார சுதந்திரத்தை பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு அவலமான சூழநிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

நாட்டை நிரந்தரமான அடகு வைத்துள்ள மோடி அரசு வரலாற்றில் வெட்கக்கேடாக பதிவு செய்யப்படும் என்றும், இந்தியாவின் சுயாட்சி மற்றும் பொருளாதார தன்னிறைவை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு அதில் தோல்வியடைந்துள்ளதாக மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கடுமையாக விமரசித்துள்ளாா்.
டிரம்ப் மிரட்டல், வரிச் சுமை: ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ரூ.32,000 கோடி சரிவு – IEA அறிக்கை


