spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉமர் காலித் - ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது –...

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது – ஜவாஹிருல்லா கருத்து

-

- Advertisement -

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது தமிழ்நாட்டிலும் போராடுவார்கள் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த கையெழுத்து இயக்கம் தொடர வேண்டும்” என ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.உமர் காலித் - ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது – ஜவாஹிருல்லா கருத்துUAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி சிறை வைக்கப்பட்டுள்ள உமர் காலித் ஷார்ஜீல் இமாம் ஆகியோரை விடுதலை செய்ய கோரியும் வழக்குகளை ரத்து செய்ய கோரியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்க துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கையெழுத்து இயக்க தலைவர் நூர்முகமது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

we-r-hiring

இதனைத் தொடா்ந்து, பீட்டர் அல்போன்ஸ், “முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி தமிழக சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். இந்த கையெழுத்து இயக்கத்தோடு மிக முக்கியமானது நாட்டினுடைய மிக முக்கியமான பொது நலனை முன்னிட்டு, தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை தியாகம் செய்கின்றவர்களை பற்றி இந்த சமூகம் மறந்து விடக்கூடாது. இந்த நாட்டினுடைய நன்மைக்காகவும் நம்முடைய வாழ்க்கைக்காகவும் சிறையில் இருக்கக்கூடியவர்கள் நாட்டு மக்கள் நினைக்கப்பட வேண்டும். அப்படி நினைக்கும் போது சிறையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும்.

உமர் காலித் – ஷார்ஜில் இமாம் எந்தவிதமான குற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை, ஆனால் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது நினைத்து தமிழ்நாட்டில் வருத்தப்பட்டு இருக்கிறார்” கூறினாா்.

இதனையடுத்து ஜவாஹிருல்லா, “உமர் காலித்  ஷார்ஜீல் இமாம் அவர்களுக்கு மிக பாரபட்சமான அநீதி இழக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் மிகப் பெரிய போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. அதைப் போராட்டம் இன்னும் மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருக்கும் கொரோனா காரணத்தால் அது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தான் மிக முக்கியமாக போராட்டம் நடைபெற்றது. அதில் டெல்லியில் உள்ள பள்ளி பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்க கூடிய மாணவர்கள் உமர் காலில், சார்ஜில் இமாம் பலர் என ஆறு மாணவர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார்கள். உமர் காலித் – ஷார்ஜில் இமாம் தவிர மற்றவர்கள் எல்லாம் விடுதலை ஆனார்கள்.

உமர் காலில், சார்ஜில் மிகச்சிறந்த சர்வேயில் முனைவர் பட்டம் படித்து வந்தவர்கள். இந்திய மக்களுடைய உரிமையை பறிப்பதற்காக இந்த சட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்தது. அதை எதிர்த்து தான் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த இரண்டு நபர்களையும் பார்த்து மத்திய அரசாங்கம் பயந்து இருக்கிறது. ஏனென்றால் அந்த அளவுக்கு அவர்கள் பேசியிருந்தார்கள். உமர் காலித் – ஷார்ஜில் இமாம் டெல்லியில் மட்டும் தான் போராடுவார்கள் என்பது கிடையாது தமிழ்நாட்டிலும் போராடுவார்கள் நாங்களும் போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த கையெழுத்து இயக்கம் தொடர வேண்டும்” என ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.

ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பு! காங்கிரஸ் நினைப்பது நடக்குமா? கோட்டீஸ்வரன் கொடுத்த அப்டேட்!

MUST READ