Homeசெய்திகள்தமிழ்நாடு"மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க அமைச்சர் 'ஜனநாயகன்' பார்த்து செல்ஃபி போடுகிறார்" – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

“மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க அமைச்சர் ‘ஜனநாயகன்’ பார்த்து செல்ஃபி போடுகிறார்” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

-

- Advertisement -

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை எலி கடித்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

எடப்பாடி பழனிசாமி

we-r-hiring

“திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்தச் செய்தியே சாட்சி.

அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்துக் கால் விரல் இழந்துள்ள அந்தப் பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக அரசு?

இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி ‘செல்ஃபி’ பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க லீவு போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருகின்றன,” என எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை!

MUST READ