spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் - சிதம்பரம் சந்திப்பு! காங்கிரஸ் நினைப்பது நடக்குமா? கோட்டீஸ்வரன் கொடுத்த அப்டேட்!

ஸ்டாலின் – சிதம்பரம் சந்திப்பு! காங்கிரஸ் நினைப்பது நடக்குமா? கோட்டீஸ்வரன் கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

முதலமைச்சருடன், ப.சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடிக்கும் நிலையில் ப.சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேசியுள்ளார். விஜய் கட்சி தொடங்கிய நிலையில், தவெக என்கிற ஆப்ஷனை பயன்படுத்தலாமா? என்று காங்கிரஸ் முயற்சித்தது உண்மையாகும். இது தொடர்பாக சர்வே எடுத்து கட்சி தலைமையிடம் காண்பித்து, தவெக உடன் கூட்டணி வைத்தால் 3 மாநிலங்களில் லாபம் கிடைக்கும் என்று கூறினார்கள். அது நன்றாக இருக்கும் என்பதால் தலைமை அனுமதியின் பேரில் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் வேலை பார்க்க தொடங்கினார்கள். ஆனால் எதார்த்தத்தை உணர்ந்த ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் போன்றவர்கள் அதை ஏற்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலையிட்டு ப.சிதம்பரத்தை பேச்சுவார்த்தை நடத்தும்படி அனுப்பியுள்ளார். பேச்சுவார்த்தை சுமூகமாகவே முடியும் என்று நினைக்கிறேன். காரணம் பேச்சுவார்த்தைகளில் ப.சிதம்பரம் இறங்கி போகிறவர் கிடையாது. அவர் போகிறார் என்றால் எதாவது ஒரு விஷயத்தை முடித்துவிட்டுதான் வருவார்.

சிதம்பரத்தை பிக்சருக்குள் கொண்டுவருதற்கு காரணம், மாணிக்கம் தாகூர் பேசிய பேச்சுகள் எல்லாம் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழுவுக்கு போயிருக்கும். கிரிஷ் ஜோடாங்கர் தலைமையிலான குழு வந்ததும் வைத்து ராகிங் செய்திருப்பார்கள். இதனால் கோபித்துக்கொண்டு சென்று தங்களை ராகிங் செய்வதாக சொல்லி,  வேறு யாரையாவது இறக்குங்கள் என்று சொல்லி இருப்பார்கள். அதனால் சிதம்பரத்தை அனுப்பியுள்ளது கட்சி மேலிடம். அவரிடம் அப்படி பேச முடியாது. மூத்த காங்கிரஸ் தலைவரான ப.சிதம்பரம் செல்கிறபோது, பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிடுவார்கள். தவெகவுக்கு காங்கிரஸ் சென்றால் ராகுல்காந்தியுடன், விஜய் பிரச்சாரம் செய்வது போன்று எல்லாம் ஏஐ வீடியோக்களை ரெடி செய்துவிட்டனர். ஆனால் தவெகவினர் தனித்துவிடப்பட்டு இருக்கிறார்கள். திமுகவுக்கு, அதிமுக தான் மாற்று. காங்கிரஸ் உடன் தவெக சேர்வதால் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, பாஜகவை எதிர்க்காத விஜயோடு எப்படி கூட்டணி வைப்பது என்று கேட்கிறார். ஆனால் ராகுல்காந்திக்கு அவரை பிடித்துள்ளது. அப்படி இல்லாமலா? விஜய்க்கு போன் செய்து பேசினார்.

திமுகவை, விஜய் தீய சக்தி என்று சொல்கிறபோதே, காங்கிரசை திமுக வீட்டிற்கு அனுப்பியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரசவாது திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெக உடன்  சென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கும் தைரியம் இல்லை. தன்னைத்தானே தைரியமாக ஒரு கட்சி நினைக்கிறது என்றால் அது தவெக. விஜய் நாம் தமிழர் கட்சி போன்று, தனித்துப் போட்டியிடுவதாக இருந்தால் அதை தைரியமாக நெஞ்சுறுதியோடு முதலில் இருந்து சொல்லி இருக்க வேண்டும்.ஆனால் எதற்காக காங்கிரஸ் நிர்வாகிகளோடு, தவெக நிர்வாகிகள் பேசுவதாக செய்திகள் வெளியாகின்றன. அல்லது பத்திரிகைகளில் தவறான செய்திகள் வெளியானால் அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் அல்லவா? நல்ல வேளையாக தேர்தல் ஆணையம் ராஜ்யசபா தேர்தல் அறிவித்தார்கள். அதனால் இந்த படம் முடிவுக்கு வருகிறது. இல்லாவிட்டால் இன்னும் 10 நாள் ஓடியிருக்கும். இன்றைக்கு ராஜ்யசபா வேட்பாளரை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் சார்பில் ராஜ்யசபா சீட் பெறுவதற்காக பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர் போன்றவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியிலும் ஓரவஞ்சனை தான் தொடர்கிறது. உ.பி.யில் பேசுவது போன்று என்டிஏ ஆட்சி என்கிறார்கள். மேலும் மாநில கட்சியான அதிமுகவை ஏன் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பேச போகிறபோது தொகுதி பங்கீட்டிற்காக மட்டும் இருக்காது. அமலாக்கத்துறை விசாரணை, தேர்தல் நிதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசலாம். தமிழ்நாட்டில் பேசுகிறபோது யாரேனும் ஒப்புக்கேட்டால் பிரச்சினையாகும் என்பதால் டெல்லிக்கு சென்றுள்ளார். அடிப்படையில் டெல்லியில் இருக்கும் பிரதமர் மோடியாகட்டும், ராகுல்காந்தியாகட்டும் தமிழ்நாட்டில் இருந்து ஒரு தலைவர் வருவது பிடிக்காது. பிரதமர், எடப்பாடி பழனிசாமி பெயரை சொல்லாதது அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும்.  ஜெயலலிதாவால் பாஜக ஆட்சியே போய் உள்ளது. அதனால் அதிமுக பழையபடி பலமாக இருக்க வேண்டும் என்பதை பாஜக விரும்பாது. அதிமுக மீண்டும் வலிமை பெற்றால் பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதார்த்த அரசியலை பார்க்கிறார். அதனால் வைத்திலிங்கம், ஒபிஎஸ் போன்றவர்களையும் கட்சியில் சேர்க்கிறார். அதனால் கட்சியில் இருப்பவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ