தலைநகர் டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.


இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை காவல்துறையினர் பலவந்தமாகத் தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மீதான விமர்சனம்:
காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சியில் இருக்கும் தமிழக முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தாலேயே, முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் தவிர்க்கிறார் என்ற குற்றச்சாட்டை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். அதேபோல, தமிழகத்தை நேரடியாகப் பாதிக்கும் நீட் தேர்வுப் போராட்டம் குறித்தும் அவர் எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது வேதனைக்குரியது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
தென்னகக் கட்சிகளின் மௌனமும், கூட்டணிக் குழப்பமும்:
தேசிய அளவில் பாஜகவின் மதவாத மற்றும் சனாதன எதிர்ப்பு அரசியலைத் தீவிரமாக எதிர்த்து வரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக தென்னிந்தியாவில் இருந்து வலுவான குரல்கள் ஒலிக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அரசியல் மாற்றங்கள் காரணமாக, டெல்லியில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதில் ஆளும்கட்சியான தவெகவும் அமைதி காத்து வருகிறது.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் நிலைப்பாடு:
“மதச்சார்பின்மை மற்றும் சனாதன எதிர்ப்பில் திமுக உறுதியாக இருப்பதால் திமுகவுடனான எங்கள் நட்பு தொடர்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் இடம்பெற்றதால் மட்டுமே திமுகவுடனான கூட்டணி உறவு முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை” வாய்ப்பு கிடைக்கும்போதுகூறி வருகிறார். இருப்பினும், டெல்லியில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் CJP அமைப்பிற்காக அவரால் தனித்து ஆதரவுக் குரல் எடுபடவில்லை.
கூட்டணிக் கட்சிகளின் நிலை:
திமுகவிலிருந்து தவெக கூட்டணிக்கு இடம் பெயர்ந்த தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) போன்ற கட்சிகளின் குரல்களும் தேசிய அளவில் எடுபடவில்லை.
ராகுல் காந்தியை ஆதரிப்பதன் அவசியமும், எதிர்கால அரசியலும்:
தற்போதைய சூழலில் ராகுல் காந்தியை ஆதரிப்பதும் தாங்கிப் பிடிப்பதும், ‘மதவாத மற்றும் சனாதன எதிர்ப்பில் உறுதியாக நிற்கிறோம்’ என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டிய கட்டாயமாகும். பாஜகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் இது பொருந்தும்.
‘ஏன் திமுக இதையே செய்யக்கூடாது?’ என்ற கேள்வி எழும்போது, காங்கிரஸ் கூட்டணியில் நீடித்தாலும் இல்லாவிட்டாலும், தனது கொள்கை சார்ந்த ‘ஜென்டில்மேன் பாலிடிக்ஸ்’ மற்றும் நாகரிக அரசியலை திமுக ஒருபோதும் கைவிடாது. இருப்பினும், ராகுல்காந்தி கைது சம்பவம் தேசிய அளவில் முக்கியப் பிரச்சினை. இதில் தமிழக அரசியல் தலைவர்கள் காட்டும் மௌனம் விவாதிக்கப்பட வேண்டும்.
