Homeசெய்திகள்கட்டுரைதவெக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல்? "ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை" - அரசியல் விமர்சகர் வள்ளம்...

தவெக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல்? “ஆட்சி கவிழ்ப்பு சாத்தியமில்லை” – அரசியல் விமர்சகர் வள்ளம் பசீர் பரபரப்பு பேட்டி!

-

- Advertisement -

தமிழகத்தில் தவெக தலைவரான முதலமைச்சர் விஜயின் நிர்வாக முறை மற்றும் கூட்டணி கட்சிகளுடனான அணுகுமுறை குறித்து பிரபல அரசியல் விமர்சகர் வள்ளம் பசீர் அளித்த பேட்டி அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

we-r-hiring
காரவான் கலாச்சாரமும் நிர்வாகத் தடுமாற்றமும்:
பிரபல யூடியூப் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவிக்கையில், “திரைப்படங்களில் வசனம் பேசுவதற்கும், நடைமுறையில் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கும் பெருமளவு வித்தியாசம் உள்ளது. எதிர்பாராத வெற்றினால் அதிகாரப் பொறுப்புக்கு வந்த விஜய், நிர்வாகத்தைச் கையாள்வதில் தடுமாறி வருகிறார். திரைப்படக் காரவான் கலாச்சாரத்தில் பழகிய ஒருவரால் கூட்டுப் பொறுப்புடன் ஆட்சியை நடத்துவது சிரமம்” என்று விமர்சித்துள்ளார்.


கூட்டணி கட்சிகளுடன் வெடிக்கும் முரண்பாடுகள்:
கூட்டணி அமைத்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை விஜய் அலட்சியப்படுத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், பின்வரும் அதிர்ச்சி தகவல்களையும் பகிர்ந்துள்ளார்:

  • காங்கிரஸின் போர்க்கொடி: கூட்டணிக்குள் நிலவும் அதிருப்தியால், “நாங்கள் எந்த நேரத்திலும் பதவியை ராஜினாமா செய்யத் தயார்” என காங்கிரஸ் அமைச்சர்கள் எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  • பிரதமர் வேட்பாளர் சர்ச்சை: அகில இந்திய அளவில் ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் விஷயத்தில் தவெக காட்டும் எதிர்ப்பே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.

பாஜகவின் வியூகமும் தனித்துப் போட்டியிடும் திட்டமும்:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைச் சரிப்பதற்காகப் பின்னணியில் இருந்து பாஜக வியூகம் வகுப்பதாகவும், அதற்குத் தவெக ஒரு கருவியாகப் பயன்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், கூட்டணி நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் தனித்து இயங்கவோ அல்லது விரைவாகச் சட்டமன்ற இடைத்தேர்தலைச் சந்திக்கவோ தவெக தரப்பு யோசித்து வருவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

பந்தாவுக்காகத் தொடரும் அரசியல் நாடகம் – பரந்தூர் கேன்சல்- திணறும் புதிய திட்டம் – ரங்கராஜ் பாண்டேவின் அனல் பறக்கும் அலசல்!

MUST READ