ஆக்ஷனுக்கு பஞ்சம் இருக்காது🔥 ஹ்ரித்திக் ரோஷன் உடன் கைகோர்க்கும் ஜூனியர் என்டிஆர்!

புதிய படத்திற்காக பாலிவுட் மற்றும் டோலிவுட் ஸ்டார் இருவர் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியில் 2019 ஆம் ஆண்டு ஹிரித்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷராப் நடிப்பில் வெளியான ‘வார்’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் கிருத்திக் ரோஷன் உடன் டோலிவுட் ஸ்டார் ஜூனியர் என்டிஆரும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

war

படத்தின் அறிவிப்பு வெளியாகும் முன்னரே படத்திற்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமாகியுள்ளார் ஜூனியர் என்டிஆர். சமீபத்தில் ஆர்ஆர்ஆர்(RRR) படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருதும் படத்தின் நடிகர்கள் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஹ்ரித்திக் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement