Homeசெய்திகள்சினிமா‘முதல் நீ முடிவும் நீ’ படத்தை அடுத்து மீண்டும் கதாநாயகன் ஆன கிஷன் தாஸ்… பூஜையுடன்...

‘முதல் நீ முடிவும் நீ’ படத்தை அடுத்து மீண்டும் கதாநாயகன் ஆன கிஷன் தாஸ்… பூஜையுடன் படம் துவக்கம்!

-

கிஷன் தாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.

தர்பூகா சிவா இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான முதல் நீ முடிவும் நீ படத்தின் மூலம் அறிமுகம் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றார் கிஷன் தாஸ்.

யூடியூப் வாயிலாக பிரபலமான இவர் அதையடுத்து நடிகராக அறிமுகமாகி முதல் படத்திலே நல்ல வரவேற்பைப் பெற்றார்.இந்நிலையில் கிஷன் தாஸ் தற்போது அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு படத்தின் இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

படத்திற்கு ‘தருணம்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்தப் படத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ம்ருதி வெங்கட் தடம், மூக்குத்தி அம்மன் மற்றும் மாறன் ஆகிய படங்களை அடுத்து இந்தப் படத்தில் இணைந்துள்ளார். தருணம் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

தருணம் திரைப்படத்தில் நடிக்க முதலில் அஸ்வின் குமார் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் இந்தப் படத்திலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக கிஷன் தாஸ் இணைந்துள்ளார்.

MUST READ