Homeசெய்திகள்சினிமா'ஜிங்குஜா' பாடலை தொடர்ந்து வெளியாகும் மெலோடி பாடல்.... 'தக் லைஃப்' பட அப்டேட்!

‘ஜிங்குஜா’ பாடலை தொடர்ந்து வெளியாகும் மெலோடி பாடல்…. ‘தக் லைஃப்’ பட அப்டேட்!

-

- Advertisement -

தக் லைஃப் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.'ஜிங்குஜா' பாடலை தொடர்ந்து வெளியாகும் மெலோடி பாடல்.... 'தக் லைஃப்' பட அப்டேட்!

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த படம் கமல்ஹாசனின் 234 வது படமாகும். இதனை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். மணிரத்னம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்னம் – கமல் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் சிம்புவும், கமலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது. அது மட்டும் இந்த படத்தில் கமல் – சிம்பு இருவரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாக நடித்திருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது.'ஜிங்குஜா' பாடலை தொடர்ந்து வெளியாகும் மெலோடி பாடல்.... 'தக் லைஃப்' பட அப்டேட்! இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து வருகின்ற ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோவும், ஜிங்குஜா எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவரந்துள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இருந்து மெலோடி பாடல் ஒன்று வெளியாக இருக்கிறதாம். இந்த பாடல் வருகின்ற மே மாதம் 7ஆம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ