spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணி....படத் தலைப்பினால் வந்த தலைவலி!

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணி….படத் தலைப்பினால் வந்த தலைவலி!

-

- Advertisement -

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணி....படத் தலைப்பினால் வந்த தலைவலி!விக்னேஷ் சிவன் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் “LIC” (LOVE INSURANCE CORPORATION) என்ற படம் பூஜையுடன் சமீபத்தில் சென்னையில் தொடங்கப்பட்டது. இப்படத்தில் பிரதீப்புக்கு ஹீரோயினாக பிரபல இளம் நடிகை கிர்த்தி ஷெட்டி நடித்த வருகிறார். எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு இறுதியாக வெளியான லவ் டுடே இளைஞர்களின் பேராதரவால் ஒரு பிரம்மாண்ட வெற்றிப் படமாக அமைந்தது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் LIC படமும் இளைஞர்கள் கொண்டாடும் படமாக உருவாகி வருகிறது.
இந்நிலையில் தான் இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பால் திடீரென பிரச்சனை கிளம்பி உள்ளது. LIC என்னும் தலைப்பை 2015 ஆம் ஆண்டிலேயே தான் பதிவு செய்து வைத்திருப்பதாக எஸ் எஸ் குமரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இவர் பூ, களவாணி போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார். மேலும் கேரள நாட்டிளம் பெண்களுடனே, தேநீர் விடுதி போன்ற சில படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய சினிமா தயாரிப்பு நிறுவனம் சுமா பிக்சர்ஸ் மூலம் “LIC” (LIFE IS COLOURFUL) என்னும் டைட்டிலை பதிவு செய்துள்ளார்.விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணி....படத் தலைப்பினால் வந்த தலைவலி! இவர் உருவாக்கியுள்ள ஒரு படத்தின் கதைக்கு இந்த தலைப்பு தான் மிகவும் பொருத்தமாக இருந்துள்ளது. இந்நிலையில் விக்னேஷ் சிவன்,தான் இயக்கும் புதிய படத்திற்கு “LIC”என்னும் தலைப்பை வைத்துள்ளார். ஆனால் இந்த தலைப்புக்கான உரிமை எஸ்.எஸ்.குமரனிடம் இருப்பதை அறிந்து, தலைப்பை விட்டுக் கொடுக்கும்படி அவரை அணுகியுள்ளார். ஆனால் எஸ். எஸ். குமரன் தரப்பில் இந்த தலைப்பைத் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இதனை மீறி LIC என்னும் தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்தி வருகிறார். இதற்காக சட்டப்படி விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர போவதாக எஸ்.எஸ். குமரன் அறிவித்துள்ளார்.

MUST READ