spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசதீஷ் - கவின் கூட்டணியில் புதிய படம்... டப்பிங் பணிகள் தொடக்கம்..

சதீஷ் – கவின் கூட்டணியில் புதிய படம்… டப்பிங் பணிகள் தொடக்கம்..

-

- Advertisement -
சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்று, டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கவினின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கவின் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ஸ்டார். இத்திரைப்படத்தை இளன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி வேலைகள் முடிவடைந்து வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து கவின் சதீஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கியது. இத்திரைப்படத்தில், அயோத்தி திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.

கவின் படத்திற்கு அனிருத் இசை அமைப்பது இதுவே முதல்முறையாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இத்திரைப்படத்தை தீபாவளி பண்டிகையை முன்னி்ட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

MUST READ