Homeசெய்திகள்சினிமாநீங்க பெரிய ஆர்டிஸ்டுன்னு பிரூபிச்சிட்டீங்க... அஜித் மச்சினிச்சி அசத்திட்டாங்க💥!

நீங்க பெரிய ஆர்டிஸ்டுன்னு பிரூபிச்சிட்டீங்க… அஜித் மச்சினிச்சி அசத்திட்டாங்க💥!

-

- Advertisement -

நடிகை ஷாம்லி தனது ஓவியங்களை துபாய் கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளார்.

ஷாலினியின் தங்கையும் நம்ம அஜித்தின் மச்சினிச்சியும் ஆன ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்பிற்காகத் தேசிய விருதைப் பெற்றவர் பேபி ஷாம்லி.

ஷாம்லி ‘ஒய்’ என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு ஓவியம், நாட்டியம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமூக கட்டமைப்புகளில் இருந்து விடுபட்டு, இலட்சியம் நோக்கி நகரும் வகையில் உள்ள தீம்களில் ஷாம்லி ஓவியங்கள் வரைந்துள்ளார். தான் வரைந்த ஓவியங்களை வைத்து சென்னை, பெங்களூரில் ஓவிய கண்காட்சி நடத்தினார் ஷாம்லி.

தற்போது துபாயில் ‘வேர்ல்ட் ஆர்ட் துபாய்’ எனும் சர்வதேச ஓவிய கலைக் கூடத்தில், தனது ஓவியங்களை ஷாம்லி பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தி இருக்கிறார். அதில் பல தனது படைப்புகளைப் பாராட்டியதாக ஷாம்லி தெரிவித்துள்ளார்.

MUST READ