ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்… சன் பிக்சர்ஸ் போடும் மெகா ஸ்கெட்ச்!

சன் பிக்ஸர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படங்கள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது பெரிய ஹீரோக்கள் நடிக்கும் 4-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளனர்.

தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கின்றனர். இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கியகி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏஆர் ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

rajini-and-lokesh.jpg

தற்போது இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உருவெடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் முதல் முறையாக சினிமாடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கி இந்திய ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ். தற்போது அவர், விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் புதிய படத்தை இயக்கயிருப்பதாகவும் அதற்காக ரஜினி கதை கேட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கின்றனராம்.

Vijay and Atlee

விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்ற மூன்று ஹிட் படங்கள் கொடுத்தவர் அட்லீ.  தற்போது ஷாருக் கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தை எடுத்து மீண்டும் விஜயுடன் அட்லீ கூட்டணி அமைக்க  இருப்பதாகவும் அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்  நடிக்கும் படங்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது அவர் ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

ayalan-33.jpg

இதற்கிடையில் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி புதிய படத்திற்காக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement