மீண்டும் இந்த சூப்பர் ஹிட் காம்போ இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் செல்ல நடிகராக உருவெடுத்துள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது அவர் ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘அயலான்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏலியனை மையமாக வைத்து பேண்டஸி படமாக உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறதாம்.

இந்நிலையில் மீண்டும் ரவிக்குமார் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி புதிய படத்திற்காக இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
ஆனால் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக கொஞ்சம் தாமதம் ஆகும் என்றும் சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன. அயலான் திரைப்படம் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட்செட்டராக அமையும் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் இந்த காம்போ கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படுவது தமிழ் சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
