Homeசெய்திகள்சினிமா'கனிமா' பாடலுக்கு சிரிப்புடன் நடனமாடிய சூர்யா.... புதிய வீடியோவை வெளியிட்ட 'ரெட்ரோ' டீம்!

‘கனிமா’ பாடலுக்கு சிரிப்புடன் நடனமாடிய சூர்யா…. புதிய வீடியோவை வெளியிட்ட ‘ரெட்ரோ’ டீம்!

-

- Advertisement -

சூர்யாவின் 44வது படமாக ரெட்ரோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.'கனிமா' பாடலுக்கு சிரிப்புடன் நடனமாடிய சூர்யா.... புதிய வீடியோவை வெளியிட்ட ரெட்ரோ டீம்! ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே 1ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் இந்த படத்தில் இருந்து வெளியான கனிமா எனும் கல்யாண பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது. மேலும் பலரும் இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர். அடுத்தது இந்த பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் பலராலும் பாராட்டப்படுகிறது.

இருப்பினும் சூர்யா இந்த பாடலில் எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் நடனம் ஆடியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அந்த பாடல் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது என்றும், கதைப்படி சூர்யா அப்படி தான் நடனமாட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ரெட்ரோ படக்குழு கனிமா பாடலுக்கு ஃபுல் எனர்ஜியுடனும், சிரிப்புடனும் நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ