Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் பட இயக்குனருடன் கைகோர்த்த விஷால்... பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட படம்!

பிரபாஸ் பட இயக்குனருடன் கைகோர்த்த விஷால்… பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட படம்!

-

விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை எஸ்ஜே சூர்யாவும் மற்றொரு கதாநாயகனாகவே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இந்த படத்தில் இரண்டு பேருக்குமே பல கெட்டப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் செல்வராகவன், ரித்து வர்மா, அனன்யா, தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. பிரபாஸ் இயக்கத்தில் ராதே ஷ்யாம் என்ற பிரமாண்ட படத்தை இயக்கிய ராதாகிருஷ்ண குமார் இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக்  கூறப்படுகிறது. மேலும் இந்தப் பான் இந்தியா அளவில் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.

விஷால் இவ்வளவு பெரிய இயக்குனரின் இயக்கத்தில் பான் இந்தியா அளவில் நடிக்க இருப்பது தமிழ் சினிமாவில் பேசுபொருளாகியுள்ளது.

MUST READ